
ஒரு சொல்லுக்குள்
உன்னை அடக்க முடியாது.
வலைக்குள் பிடிபடாத வானம்…
அவிழும் தென்னம்பாளையிலிருந்து
சிதறும் தேன்…
நதி தீரத்தில் படிந்த
கருமை கலந்த வெண்மணல்…
நீல வண்ணப்
பெயரற்ற பறவையின்
துளிர்சிறகு…
வேம்பில் கசியும்
பொன்னிறப் பிசின்…
கள்ளிப்பழத்தின்
உதிரச்சிகப்பு…
நீரள்ளித் தெளிக்கும்
மென்சாரல்…
உயிர்த்தெழுந்து
நீயாக நிற்கிறாய்.
🦀
