வனஜா முத்துக்கிருஷ்ணன்/செல்லம்மா

வறுமையிலும் பசியிலும் வாடினாலும், துர்கை அம்மன் கோவிலைச் சுத்தம் செய்து, கோலமிட்டு, பூக்களால் அலங்கரிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தாள் செல்லம்மா.

ஒருநாள், கனவில் தோன்றிய அம்மன், அவளுடைய பசியைக் கண்டு வருந்தி, கோவிலுக்குத் தொண்டு செய்ய அழைத்ததாக நம்பினாள். அன்று முதல், அம்மனுக்குத் தொண்டு செய்வதிலேயே பேரின்பம் கண்டாள்.

ஒருநாள், கோவிலில் அவளருகே வந்த வயதான பெண்மணி, அவளுடைய கால்களில் இருந்த கொப்புளங்களைக் கண்டு வருந்தி, தண்ணீரும் பிரசாதமும் கொடுத்தார்.

“எனக்கு அடுத்த பிறவி வேண்டாம். என் அம்மன் பாதத்தில் இடம் கிடைத்தால் போதும்!” என்று கூறிய செல்லம்மா, அந்தப் பெண்மணியின் கால்களில் விழுந்தாள்.

அவள் நெற்றியில் குங்குமமிட்ட பெண்மணி, “உன் பக்தி எனக்குத் தெரியாதா, அம்மா?” என்று புன்னகைத்தார். செல்லம்மாவின் உடல் சிலிர்த்தது.

மறுநாள், துர்கை அம்மனை இறுகப் பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் செல்லம்மா.

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன