முனைவர் என். பத்ரி/அயராத உழைப்புக்கு அபிராமி

அபிராமி அந்த வீட்டின் புதிய மருமகள். வீட்டின் ஒரே மருமகள். அவளுடைய கணவன் குமார், காலையில் வேலைக்குச் சென்றால் இரவில்தான் வீட்டுக்கு வருவான். அவர்களுடைய ஒரே குழந்தைக்கும், மாமனார், மாமியார் இருவருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் செய்யும் அபிராமிக்கு, அன்றாடம் இருக்கும் 24 மணி நேரமும் போதவில்லை.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அபிராமியுடன் இன்று ஒரு நாள் பொழுதை இனிமையாகக் கழிக்கலாம் என்று காத்திருந்தான் குமார். ஆனால், அபிராமியோ இங்கும் அங்குமாக, நிற்கக்கூட நேரமில்லாமல் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.
குமாருக்கு ஓரளவு ஓவியம் வரையத் தெரியும். அபிராமி தொடர்ந்து வேலைகளைச் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தபோது, அவளுக்கு இருக்கும் இரண்டு கைகள் போதாது என்று நினைத்தான் குமார். எனவே, அவளை அபிராமி அம்மனாகவே கற்பனை செய்துகொண்டு, பல கைகளைக் கொண்டவளாக ஓர் ஓவியத்தை வரைந்தான். அதை அவள் பார்க்கும் வகையில் ஒரு சுவரில் ஒட்டிவைத்து, அதன் மேலே ‘அபிராமி’ என்று எழுதி வைத்தான்.
அதைப் பார்த்த அபிராமி, தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள வெகுநேரம் ஆனது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன