மரு. ச. கந்தசாமி/கனவிலும் நீயே

“ஏண்டி லட்சுமி, நவராத்திரி அதுவுமாகக் காலையில் எட்டு மணி வரைக்கும் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? எழுந்திரு. எழுந்து பூஜை வேலையைப் பார்!” என்றாள் தாய் அம்புஜம்.
லட்சுமி ஒரு தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிபவள். தான் பூஜை செய்யும் துர்காதேவி, மகளுக்கு ஒரு நல்ல வரத்தைத் தர மாட்டாளா என்ற ஏக்கம் அம்புஜத்திற்கு இருந்தது.
நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையும் முடிய, அம்புஜம் நன்றாகத் தூங்கிவிட்டாள். திடீரெனக் கண் விழித்தபோது, வீடே பிரகாசமாக இருந்தது. எதிரே துர்காதேவி அமர்ந்திருந்தாள்.
இது கனவா என்று அம்புஜம் தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்.
துர்காதேவியோ, “அம்புஜம், உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்றாள்.
அம்புஜமோ மெய்மறந்து, “எங்களுக்கு நீயே துணை!” என்றாள்.
துர்காதேவி கலகலவெனச் சிரிக்க, திடீரென மறைந்துபோனாள்.
மறுநாள் காலை பத்து மணி அளவில் ஒரு தபால் வந்தது. லட்சுமிக்குப் பொருத்தமான மாப்பிள்ளையின் ஜாதகம் கிடைத்திருப்பதாகவும், பெண் பார்க்க வருவதாகவும் தகவல் வந்தது.
அம்மன் அருளால் நல்ல வரம் கிட்டியதை எண்ணி அம்புஜம் மெய்சிலிர்த்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன