செல்லம் சேகர்/பஞ்சபூதங்களும் ஐம்புலங்களும்

அர்த்தமுள்ள ஆன்மிகம் 12

பஞ்ச பூதங்கள் என்பது நிலம் , நீர், நெருப்பு , காற்று , ஆகாயம் என்பது நாம் அறிந்ததே . இதன் ஆன்மீக விளக்கமும் நாம் கேள்வி பட்டிருப்போம்.
நம் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது …அண்டம் என்பது பிரபஞ்சம் பிண்டம் என்பது நம் உடலை குறிக்கும் சொல் …இரண்டிலும் இருப்பது ஒன்றே .
சிவபெருமான் இந்த ஐம்பூதங்களின் வடிவமாகவே திகழ்வதாக இந்து சமய விளக்கங்கள் கூறுகிறது . இந்த ஐம்பூதங்களும் சிவபெருமானின் வடிவங்களாகப் போற்றப்படும் பஞ்சபூத ஸ்தலங்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் .
சிவ பெருமான் தன்னுடைய படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலை பஞ்சபூத தலங்களில் வீற்றிருந்து செய்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மனிதனின் உடல் இயக்கத்திற்கு பஞ்சபூதங்களின் இயக்கம் அதிமுக்கியமானது . பஞ்சாக்ஷர மந்திரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் அடிப்படை சிவாய நம என்ற ஐந்து எழுத்து சிவ பெருமானுடனும், மனிதர்களின் வாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது என்பதை பார்ப்போம்

ஐந்து ஆற்றல்கள் அவற்றின் இயக்கங்கள்

நிலம் திடத்தன்மை வாய்ந்த நமது பூமியை குறிக்கும் அதுவே நம் உடலின் எலும்பு , தசைகள் , என உடலின் ஒவ்வொரு அணுக்களும் இணைந்திருப்பதை குறிக்கிறது .
நீர் மழை நதி நீர்நிலைகள் என திரவ நிலையை குறிக்கும் இவை நம் உடலின் ரத்தம் , உடலில் உள்ள நீர் சத்துக்கள் , பித்தம், உமிழ்நீர் மற்றும் உடல் கழிவு நீர் போன்ற திரவப் பகுதிகள் நீரின் தன்மையைக் குறிக்கும் .
நெருப்பு …நம் உடல் இயக்கத்தில் உள்ள பசி , தாகம் , உடலின் வெப்பம் , ஜீரணம் போன்றவற்றுக்கான ஆற்றலோடு இணைந்தது
காற்று இது நாம் விடும் மூச்சு ஸ்வாசித்தல் , உடலின் அசைவுகள் அது சுருங்கி விரியும் இயக்கம் இவற்றோடு தொடர்புடையது
ஆகாயம் என்பது நம் உடலின் வெற்று இடங்கள் மற்றும் சிந்திக்கும் திறனோடு இணைந்தது.
நம்மிலும் நம் அண்டத்திலும் இவற்றை உணர்கிறோம்
நிலம் நம் உடல்
நீர் நம் உடலின் ரத்த ஓட்டம்
நெருப்பு நம் உடலின் உஷ்ண நிலை
காற்று பிராண வாயு நமது சுவாசித்தல்
ஆகாயம் அதை வெட்ட வெளி அது தலையின் கபாலம் அதன் அருகில் உள்ள மூளை மிதந்த படி இருக்கும் கபாலத்திற்கும் மூளைக்கும் டையில் உள்ள இடமே ஆகாயம் அதுவே சிந்திக்கும் திறன் நம் இயக்கத்திற்கான ஆற்றல் தரும் .
உணர்வதற்கும், அனுபவிப்பதற்கும் உதவும் ஐந்து உணர்வின் ஆற்றல்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளே ஐம்புலன்கள் எனப்படும் .
கண் பார்வையின் மூலம் ஒளி பிரகாசம் நிறம் இவற்றை உணர்தல் இது நெருப்பு
காதுகள் …ஒலியை சப்தத்தை கேட்டு உணரும் சக்தி இது வெளியை குறிக்கும் ஆகாயம்
தொடுதல் நமது உடலின் தோல் என்பது ஸ்பரிசம் காற்றோடு தொடர்புடையது
நாக்கு சுவையை உணர வைக்கிறது …இது நீரோடு தொடர்புள்ளது
மூக்கு என்பது நுகர்தல் என்னும் வாசனை அறிய உதவும் இது நிலம்
நுகர்தல் , தொடு உணர்ச்சி , சுவைத்தல், கேட்டல் மற்றும் பார்த்தால் என முக்கிய புலன்களோடு தொடர்புள்ளது
பௌதீக அடிப்படையிலும் நம் உடல் ஐம்பூதங்களால் ஆனது என கூறுவோம் . உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரி யாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
பிரபஞ்சம் முழுமையுமே பஞ்சபூதங்களால் ஆனது
நிலம் இல்லையெனில் பூமி இல்லை .
நீர் இல்லையெனில் வாழ்க்கை இல்லை
நெருப்பு இல்லையெனில் இயக்கம் இல்லை
காற்று இல்லையெனில் உயிர் இல்லை
ஆகாயம் இல்லையெனில் எதுவும் செயல் படாது …
உடலின் பஞ்சபூதங்களில் எந்த சிரமும் நேராமல் காக்க வேண்டும் என சிவபிரானை தொழுவோம் இவை அனைத்திற்குமான இறை நம்பிக்கையும் கடவுளும் சிவபெருமானே .

சிவாய நம என்றே எப்போதும் கூறி கொண்டிருப்போம் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன