கரந்தை இந்து/மா துர்கா

“அம்மா, இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் பஸ்ஸில் வரும்போது அம்பாளைப் பார்த்தேன்!” என்றான், பள்ளியிலிருந்து வந்த எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்தி.
“முதலில் நீ போய் யூனிஃபார்மைக் கழற்றிவிட்டு, கை, கால்களைக் கழுவு. பிறகு பேசலாம்” என்றாள் சந்திரா.
இந்த வருடம்தான் பஸ் பாஸ் வாங்கிக் கொடுத்து, அவனைத் தனியாகப் பேருந்தில் அனுப்புகிறாள். அதனால், அவன் பேச்சைக் கேட்டு அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.
அவன் வந்ததும், “என்ன நடந்தது என்று சொல்கிறாயே, கண்ணா? மெதுவாகச் சொல்” என்று கேட்டாள்.
“நீ எப்போதும் சொல்வாயே, அம்மா! சுவாமி படத்தில் மட்டுமில்லை; எங்கே அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பவர்கள்தான் சுவாமி என்று. ஒரு பெண்ணைப் பேருந்தில் ஒருவர் தவறாகத் தொட்டாராம். அந்தப் பெண் பாவமாக அழுதாள். அப்போது பக்கத்தில் நின்ற ஒரு அம்மா, அவனை நன்றாகத் திட்டி, தைரியமாக இரண்டு அடி கொடுத்து, பேருந்தை விட்டு இறக்கிவிட்டாங்க. பேருந்தில் எல்லோரும் கைதட்டிப் பாராட்டினோம், அம்மா! அவங்க அம்பாள்தானே, அம்மா?”
“சரியாகச் சொன்னே! அந்தத் துர்க்கை அம்மன்தான் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அந்த அம்மாவின் உருவில் வந்திருக்கிறாள்.”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன