இலக்கிய இன்பம் 17/கோவை எழிலன்


புகழன்றி வசையும் உண்டோ?

கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.

உலகின் இவ்வியல்பைக் கம்பன் வாலி இராமனை ஏசும் பாடலில் கூறுகின்றான்.

வாலி இராமனைப் பார்த்து “இவ்வுலகில் குரங்கினத்திற்கு மட்டும் கலிகாலம் வந்து விட்டதோ? மெலிந்தோர்க்கு மட்டும்தானோ ஒழுக்கம் போன்ற நெறிகள்? வலியவர் தவறு செய்தால் அவர்களுக்கு புகழ்தானே கிடைக்கிறது வசையா கிடைக்கிறது?” என்று கேட்கும் பாடல் இது.

தன்னை முறையின்றி கொன்ற இராமனைக் கருணை வள்ளலே என்று வஞ்சப் புகழ்ச்சியாக அழைப்பது இப்பாடலுக்கு மேலும் சுவை ஊட்டுகிறது.

“ஒலிகடல் உலகம் தன்னின்
ஊர்தரு குரங்கின் மாட்டே
கலியதன் காலம வந்து
பரந்ததோ கருணே வள்ளால்!
மெலியவர் பால தேயோ
ஒழுக்கமும் விழுப்பம் தானும்
வலியவர் மெலிவு செய்தால்
புகழன்றி வசையும் உண்டோ?”