வே. கல்யாண்குமார்/அப்பா கட்டிய வீடு.!

அப்பா கட்டிய வீடு.! அதை
அண்ணாந்து நீ பாரு.!
இப்போ இருக்கும் நிலையை
எண்ணிப் பாரு கண்ணீரு!

பந்த பாச செங்கலிலே..
பாத்துப் பாத்துக் கட்டினார்.!
ஒன்று பட்டு வாழ்க என்று
உறுதியாக கட்டினார்.!

அப்பாவுடன் அம்மா இருந்து
ஆசையுடன் கட்டிய..
அந்த வீடு.. இந்த நாளில்..
 அலங்கோலத்தைப் பாரு.!

அம்மா அப்பா போனபின்பு
அந்த வீடு இடிந்தது..
அந்த கால சன்னலெல்லாம்
துருப்பிடித்துக் கிடந்தது.!

சொந்தமில்லே பந்தமில்லே
பிரிவினையால் தகர்ந்தது..!
சொத்துச் சண்டை மக்களுக்கு
என்ன சுகத்தைத் தந்தது.?

அப்பா அம்மா ஆத்துமாக்கள்
அங்குதானே இருக்குது..
அதை உணரா பிள்ளைகளால்
அந்த வீடு இடிந்தது.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன