தி. வள்ளி/கோடி கோடி மின்னல்கள்

விவாகரத்துக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்படி, அவன் மகள் இரண்டு வயது அக்ஷராவை மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் பார்க்கலாம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை.

சனிக்கிழமை இரவே அவன் மனம் முழுவதும் அவள்தான். மகளின் நினைவில் தூக்கம் வர மறுத்தது. கண்கள் கண்ணீரில் நனைந்தன.

பெற்றெடுத்தது ஹாசினி என்றாலும், அக்ஷராவை வளர்த்தது அவன்தான். நீதிமன்றத்தில் ஏக்கத்துடன் அவள் பார்த்த பார்வை அவன் கண்முன்னே நின்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு, ஹாசினியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கீழே இருக்கும் பூங்காவில் காத்துக்கொண்டிருந்தான். இதோ, ஹாசினியுடன் அக்ஷரா!

அப்பாவைப் பார்த்த குழந்தையின் கண்களில் கோடி கோடி மின்னல்கள்! ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டாள்.

அப்பா இல்லாதபோது, அப்பாவின் நினைவாக அவளுக்கு அவன் கடைசியாக வாங்கிக்கொடுத்த பிங்கி பொம்மையை, இருவரும் அன்புடன் அணைத்துக்கொண்டிருந்தனர்.

தி. வள்ளி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன