செல்லம் சேகர்/தொடுவானமான தாய்!

சின்னப்பெண் சித்ரா, “அப்பா, ஊருக்குப் போயிட்டு வந்தியே! ஏன் அம்மாவைக் கூட்டிட்டு வரலை? இந்தப் பொம்மையைப் பத்திரமா பார்த்துக்கோ. சீக்கிரம் தம்பிப் பாப்பாவோடு வரேன் என்றாங்களே!” என்று பொம்மையைக் கொஞ்சியபடி அழுதாள்.
கேசவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
மலைப்பிரதேசத்தில் பிரசவம் சிக்கலாகிவிடுமோ என்ற பயத்தில், மனைவி ராகினியை அவளது அண்ணன் சங்கருடன் கோவைக்கு அனுப்பியிருந்தான். ஆனால், கொட்டும் மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் கார் சிக்கி, இருவரும் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் செய்தியைச் சின்னஞ்சிறு மகளிடம் சொல்ல முடியாமல் கேசவன் மனதிற்குள் அழுதான்.
“சித்து குட்டி, அம்மா சீக்கிரம் வந்திடுவா. நீ பொம்மையைப் பத்திரமா பார்த்துக்கோ!” என்று அவளைத் தேற்றினான்.
தாயை இழந்த மகளுக்குத் தாயாகவும் மாற வேண்டிய தன் நிலையை எண்ணிக் கலங்கினான்.
அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்த சித்ராவுக்கு, இனி அவள் அம்மா ஒரு தொடுவானம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன