பி. ஆர். கிரிஜா/ஃபாதர்ஸ் டே

வார்த்தை எண்ணிக்கை: 118 (மூலத்தில் குறிப்பிடப்பட்டபடி)

அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு, தன் அப்பாவுக்குச் சர்ப்ரைஸாக ஏதாவது பரிசு கொடுக்க விரும்பினாள் ஸ்வேதா. அடிக்கடி அவளுடைய அப்பா வேலை விஷயமாக வெளியூருக்குச் சென்றுவிடுவார்.

இன்று மதியம் வந்துவிடுவார் என்று அம்மா ஏற்கெனவே சொல்லியிருந்ததால், எப்போது பள்ளி முடியும் என்று காத்திருந்தாள்.

அவளுடன் யூகேஜி படிக்கும் காவ்யா, “ஸ்வேதா, நீ உங்க அப்பாவுக்கு ஒரு டி-ஷர்ட் வாங்கிக்கொடு. நானும் எங்க அப்பாவுக்கு வாங்கிட்டேன்” என்றாள்.

“எஸ் காவ்யா! நான் என் பாக்கெட் மணியில் ஆயிரம் ரூபாய் சேமித்து, நேத்து மம்மியோட போய் அப்பாவுக்குப் பிடித்த ப்ளூ கலரில் ஒரு டி-ஷர்ட் வாங்கிட்டேன். நீயும் அதே ஐடியா தந்தாய். சூப்பர்! தேங்க்ஸ்டி!” என்றாள் ஸ்வேதா.

வீட்டுக்குக் குதித்துக்கொண்டு வந்தாள். “ஹேப்பி ஃபாதர்ஸ் டே, பா!” என்று சொல்லி, அப்பாவின் கையில் அந்தப் பரிசைக் கொடுத்தாள்.

“தேங்க்ஸ், ஸ்வேதா டார்லிங்!” என்று அவளுடைய அப்பா, அவளை அன்புடன் அணைத்துக்கொண்டு, அவள் கையில் ஒரு பார்பி பொம்மையையும் சாக்லெட் பெட்டியையும் கொடுத்தார்.

அப்பாவின் அணைப்பு, அவளுக்கு மகிழ்ச்சியில் வானத்தில் பறப்பதுபோல் இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன