ருக்மணி வெங்கட்ராமன்/அன்பின் பரிணாமம்

“அப்பா!” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் பானு.

“வந்து ரொம்ப நேரமாயிடுச்சா? சாரி டா. டிராஃபிக்கில் மாட்டிக்கிட்டேன்.”

“பரவாயில்லை பா. இந்தப் பொம்மையை நீங்க வாங்கிக் கொடுத்தது. ஞாபகம் இருக்கா?”

“நல்லா ஞாபகம் இருக்கு. நாம் கொடைக்கானல் போனபோது இந்தப் பொம்மை வேண்டும் என்று அடம் பிடிச்ச. அம்மா, ‘வாங்கிக் கொடுக்காதீங்க, வேணாம். பிடிவாதம் பிடித்து காரியத்தைச் சாதிக்கிறா’ என்று கூறினார். ஆனால் நான் வாங்கிக் கொடுத்தேன்.”

“கரெக்ட்!”

“அம்மா சொன்னதும் சரிதானே. எங்கே நீ பிடிவாதக்காரியாகப் போய்விடுவாயோ என்று பயம்.”

“இப்ப நான் ஒண்ணு சொன்னா கேக்கறீங்களா?”

“தங்கம், சொல்லுமா.”

“நீங்க செய்யற இந்த வேலையை விட்டுவிடுங்க. வேணாம். இதைத்தான் அம்மா சொன்னாங்க. அவங்களுக்கு உங்க மேல அன்பு இருக்கு. நீதிமன்ற உத்தரவுப்படி என்னை இங்கே கூட்டிட்டு வந்து விட்டுவிட்டு, அங்கே உட்கார்ந்து உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க.”

திரும்பிப் பார்த்த சேகரின் மனம் முழுவதும் வசந்தியுடன் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் நிறைந்தன.

வேகமாகச் சென்று வசந்தியின் கையைப் பிடித்து, “உனக்கும் என் மகளுக்கும் பிடிக்காத இந்த வேலை வேண்டாம். விட்டுடறேன்” என்றான்.

வசந்தி சேகரைக் கட்டிக்கொண்டாள்.

“ம்! நான் சொன்னபோது கேட்கலை. மக சொன்னதும் கேட்கிறீங்க.”

அன்றிலிருந்து பாரில் வேலை செய்வதை விட்டுவிட்டு வேறு வேலை தேட ஆரம்பித்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன