
வழக்கமாகச் சென்று வரும் பார்க் அது. மரங்கள் அடர்ந்த அந்தப் பார்க்கில் குரங்குகளின் தொல்லையும் உண்டு.
குரங்குகளும் குயில்களும் வலம் வரும் அந்தப் பார்க்குக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்தாள் சரளா.சரளா மோகனின் செல்ல மகள்.
“சரிம்மா, கிளம்பு. போகலாம்” என்றதும், தன் பஞ்சு பொம்மையைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் சரளா.
மோகனின் மனைவி வேறொரு வேலையாக வீட்டிலேயே தங்கிவிட்டாள்.
பார்க்கில் வழக்கமாக அமரும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான் மோகன்.
சரளாவுக்குக் குரங்குகளின் விளையாட்டையும் குயில்களின் குரலையும் வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான்.
அப்போது மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. அவளுடன் பேசிக்கொண்டிருந்த மோகன், சரளாவைக் கவனிக்கத் தவறிவிட்டான்.
அந்த நேரத்தில் வந்த ஒரு குரங்கு, சரளாவின் கையிலிருந்த பஞ்சு பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு ஓடியது.
பொம்மைக்காக குரங்கின் பின் ஓடிய சரளா, கண்ணுக்கெட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டாள்.
பேசி முடித்துத் திரும்பிய மோகன், சரளாவைக் காணாமல் பதறிப்போனான். சுற்றுமுற்றும் தேடினான். அவள் எங்கே போனாள் என்று தெரியாமல் தவித்தான்.
சிறிது தூரத்தில், பஞ்சு பொம்மையைக் கீழே போட்டுவிட்டு ஓடிப்போனது குரங்கு.
அருகில், பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு திக்கு தெரியாமல் நின்றிருந்தாள் சரளா.
அவளைக் கண்டதும் மோகனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
“குங்கு..குங்கு” குரங்கைக் காட்டி மழலையில் சொன்னாள் சரளா.
“குரங்குகள் குட்டிகளைத் தனித்து விடுவதில்லை.”
நினைத்துக் கொண்டே சரளாவை வாரி அணைத்தான் மோகன்.
145

Nice one