
- ஆழமான கருத்து
லிஃப்டில் ஒரு சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்தேன். அக்கறையில் நான் சும்மா சொன்னேன், “இவ்வளவு குளிரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுப்பா!”
அதற்கு அவன், “எங்க பாட்டி 103 வயசு வரை வாழ்ந்தாங்க தெரியுமா?” என்றான்.
“ஐஸ்கிரீம் சாப்பிட்டதாலா?” என்று கேட்டேன்.
அவன் சொன்னான், “இல்ல, அவங்க அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்க மாட்டாங்க!”
என்ன ஒரு ஆழமான கருத்து! நான் ஏன் இவ்வளவு சீக்கிரம் வயசான மாதிரி தெரியுறேன்னு இப்போ தான் புரியுது – தேவையில்லாம அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கிறது தான்.
- பதட்டம்
இந்த காலத்துல எங்க பார்த்தாலும் மோசடி தான். நியூஸ்ல பார்த்தேன், யாரோ ஒருத்தரோட சேமிப்பு பணம் எல்லாம் மாயமா மறைஞ்சிடுச்சாம், லட்சக்கணக்குல போயிடுச்சாம்.
பதறிப்போய் நான் பைக்கை எடுத்துக்கிட்டு பேங்குக்கு ஓடினேன். கார்டை போட்டு, பாஸ்வேர்ட் போட்டு பேலன்ஸ் செக் பண்ணினேன். நல்லவேளை, என் சேமிப்பு கணக்குல இருந்த 3023 ரூபாய் அப்படியே இருந்தது. அப்பாடான்னு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
அப்பாடா, என்ன ஒரு பதட்டம்! இனிமே நியூஸே பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன், ரொம்ப ஸ்ட்ரெஸ்!
பேங்கை விட்டு வெளியே வந்தா, இன்னும் அதிகமா சோர்வாயிட்டேன். ஏன்னா, என் சேமிப்பு கணக்கு பணம் பத்திரமா இருந்தது, ஆனா என் பைக்கை காணோம்.
- பொறுமை
ஒரு இளம்பெண் ரயிலில் ஏறினாள். அவள் சீட்டில் ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். பணிவாக தன் டிக்கெட்டை சரிபார்த்து, “சார், நீங்க என் சீட்ல உட்கார்ந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்” என்றாள்.
அந்த ஆள் தன் டிக்கெட்டை எடுத்து கத்தினார், “நல்லா பாரு! இது என் சீட் தான்! உனக்கு கண் தெரியலையா?!”
அந்த பெண் அவர் டிக்கெட்டை கவனமாக பார்த்துவிட்டு, வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக அவர் பக்கத்திலேயே நின்று கொண்டாள்.
ரயில் கிளம்பிய பிறகு, அந்த பெண் மெதுவாக குனிந்து, “சார், நீங்க சீட் மாறி உட்காரல, ஆனா ரயில் மாறி ஏறிட்டீங்க. இது கோயம்புத்தூர் போற ரயில், உங்க டிக்கெட் சென்னைக்கு” என்றாள்.
சில நேரங்களில் நாம் காக்கும் பொறுமை, அடுத்தவரை வருத்தப்பட வைக்கும். கத்துவதால் எல்லாம் சரியாகிவிடும் என்றால், கழுதைகள் தான் இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும்.
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
