கி. பார்வதி/அபி (நயா) குட்டி

பிரகாஷின் முகம் என்றோ பிரகாசத்தை இழந்துவிட்டிருந்தது. தொடர் தோல்விகளும் ஏமாற்றங்களும் அவனை விரக்தியின் அடியாழத்தில் தள்ளியிருந்தன.
இன்று வேலை கிடைப்பதற்கான அறிகுறி தெரிய வேண்டும். இல்லையென்றால் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு எழுந்து நடக்கலானான்.
பூங்காவின் உள்ளே தனியாக ஒரு குழந்தை கையில் அழகான பொம்மையுடன் நின்றுகொண்டிருந்தது. பெற்றோரை விட்டுப் பிரிந்து வழி தவறி வந்திருக்குமோ என்று எண்ணியவன், குழந்தையை நெருங்கி, “பாப்பா, உன் பெயர் என்ன?” என்று அன்புடன் கேட்டபடி அணைத்துக்கொண்டான்.
“என் பேரு அபி. நானும் எங்க அப்பாவும் இந்தப் பூங்காவுக்கு வந்தோம். எங்க அப்பா ஃபோனில் பேசிக்கிட்டிருந்தாரு. இந்தப் பொம்மையைப் பார்த்த நான், அதை எடுக்க வந்தேன். அப்பாவை மிஸ் பண்ணிட்டேன்.”
அபியைத் தூக்கிக்கொண்டு பூங்கா முழுவதும் சுற்றினான். அவளுடைய அப்பாவும் அவளைத் தேடிக்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில், அபி “அப்பா!” என்று அழைத்துக்கொண்டு ஓடினாள். குழந்தையை அவளுடைய அப்பாவிடம் ஒப்படைத்த திருப்தியில் பிரகாஷின் முகம் மீண்டும் பிரகாசமடைந்தது.
அதற்குப் பிரதிபலனாக, தான் வசிக்கும் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலாளராக இருந்த அபியின் அப்பா, பிரகாஷுக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை தற்காலிகமாக ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குடியிருப்பில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கும் அவனுடைய வரவு மகிழ்ச்சியைத் தந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன