அழகியசிங்கர்/ஜனனி

இருவரும் சேர்ந்து வாழ்வதில்லை என்று முடிவு செய்த பிறகு, ஜெயந்தி தன் பெண் குழந்தை ஜனனியையும் அழைத்துக்கொண்டு, தன் அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். ஜனனியைப் பார்க்காமல் இடிந்துபோய்விட்டான் சங்கரன்.
சிறிது நேரம் கழித்து ஜனனியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தான் இருக்கும் தாத்தா வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பூங்காவில் மாலை ஐந்து மணிக்கு தன்னைச் சந்திக்க வரும்படி சங்கரனிடம் வேண்டிக்கொண்டாள் ஜனனி.
அவளுடைய தொலைபேசி அழைப்பைக் கேட்டவுடன் உற்சாகமாகிவிட்டான் சங்கரன்.
ஜனனியை எதிர்பார்த்துப் பூங்காவிற்கு வந்திருந்தான் சங்கரன். அவளைப் பார்த்தவுடன் ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டான்.
கையில் சிவப்பு நிறப் பொம்மையை வைத்திருந்த ஜனனி, அப்பாவைப் பார்த்து, “இனிமேல் அம்மா வேண்டாம்; நீதான் வேண்டும். உன்னுடன் வந்துவிடுகிறேன்” என்றாள் அழுதுகொண்டே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன