அருகிருத்தல்/-அதங்கோடு அனிஷ்குமார்

ஒரு நோயாளியின்
அருகிருத்தல் என்பது
துயரங்களைத்
தூக்கிச் சுமக்க
நிர்பந்திக்கப்படுவது
போலாகும்.

அவர்கள்
வலிகளை
முனகல்களால்
வார்த்தைகளற்ற
சைகையால்
மொழிபெயர்க்கையில்
தவிப்பின் ரேகைகள்
நம் முகத்தில்
படர்கின்றன.

ஒரு
நோயாளி
நம் கைபற்றும் பொழுது
அவர்களை
கரையேற்றும்
ஒரு
சமிக்ஞைக்கான
காத்திருப்பு
அவர்களின்
கண்களில் தெரிகிறது.

நாளைகளின் மீதான
பற்றுதலைக்
கேட்கும்
அவர்களின்
கரங்கள் மீது
இறுகும் நமது பிடிகள்
இன்னும் இன்னும் என
அவர்கள்
உதடுகள்
முனுமுனுக்கும்.

நம் அண்மை
அவர்களுக்கான
ஒரு பிடிமானமாக
மாறும் பொழுது
நம்
அருகிருத்தல்
அவர்களுக்கு
வெளிச்சப்புள்ளிகளை
அறிமுகப்படுத்துகிறது.

One Comment on “அருகிருத்தல்/-அதங்கோடு அனிஷ்குமார்”

Comments are closed.