
அகல்விளக்கின் திரிச்சுடராய்
பகல்விளக்கும் சுடுகதிராய்
இருள்வழியில் தெருவிளக்காய்
இறைமொழியுரை தீபமாய்
இடுகாட்டில் இடுதணலாய்
அகக்கண்ணின் உள்ஒளியாய்
இதந்தரும் மதியொளியாய்
தாரகையாய் மின்மினியாய்
சுதந்திரப் பெருங்கனலாய்
மாதரை இழிவுசெய்
மடமையெரி தழலாய்
யாதுமாகி நின்றதீயைப்
போதுமலர்க் கவிகளெனத்
தமிழ்வேதமென
எமக்களித்தாய் நீ பாரதீ..
தீக்குள் விரல்வைத்திறை
தீண்டுமின்பம் நீயுணர்ந்தாய் உன்
பாக்களை மனமிருத்தி
அகத்தீயை நிதம்வளர்ப்போம்..
ஜகத்தினையும் ஒளிர வைப்போம்..
(25.11.2021)
