வி.கே. லக்ஷ்மிநாராயணன்/பரிசு

பதினான்கு வயதான பவித்ரா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி. அனைத்துப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்து முதல் ரேங்க் வகிப்பவள்.
பள்ளி நடத்தும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வென்றாள். துபாயில் வேலை பார்க்கும் தன் தந்தைக்கு ஃபோனில் தான் பரிசு வென்றதைப் பற்றிச் சொன்னவள், தான் வரைந்த ஓவியத்தையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தாள். அதைப் பார்த்த அவளுடைய தந்தை ஒரு கணம் மலைத்துப் போனார். அது பவித்ராவுக்குத் தெரியாது.
ஓவியத்தில் ஆறு முகங்களை வெவ்வேறு வண்ணங்களில் தீட்டி வரைந்திருந்தாள் பவி. பார்க்க மாடர்ன் ஆர்ட் போல இருந்தது.
ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெறாமல் ஏமாற்றமுற்ற ஏழைப் பெண்ணான பொன்னிக்குத் தான் வென்ற பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டதாக பவி செய்தி அனுப்பியபோது, அவளுடைய தந்தை மகிழ்ச்சியுற்றார்.
இந்தச் சின்ன வயதில் ஈகைக் குணம் கொண்ட மகளைப் பாராட்டினார். பாராட்டைப் பெற்ற பவியும் களிப்புற்றாள்.
பவித்ராவின் தாயும் மகளின் செயலில் மனம் மகிழ்ந்து பாராட்டினாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன