பெரியார் அறிவுலகம் (நூல் நிலையம்) ஊழல் அதிர்ச்சி அடைய வைக்கிறது

பெரியார் அறிவுலகம் (நூல் நிலையம்) ஊழல் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

அதிர்ச்சி,

  1. குறிப்பிட்ட பதிப்பகங்களுக்கு மட்டுமே ஏகப்பட்ட நூல்களுக்கு ஆர்டர் தந்தது மட்டுமல்ல
  2. பகல் கொள்ளை விலை! 300 பக்க புத்தகம் ரூ. 1500 என்கிற ரேஞ்சில் இருப்பதாகச் சொல்கிறார்கள்! அதிர்ச்சி இது மட்டும் அல்ல,
  3. புத்தகத்தின் சப்ஜெக்ட் கண்டெண்ட் மஹா விரச் சூப்பித்தனமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்! நாலடியார் என்பது ஒரு ஆசாமி என்கிற அர்த்தத்தில் எல்லாம் கண்டெண்ட் இருப்பதாகச் சொல்கிறார்கள்! இது மட்டுமல்ல அதிர்ச்சி,
  4. நூலாசிரியர் பெயரில் திரிஷா, விஜய் என்கிற பெயர்கள் இருக்கின்றன; இங்கேதான் கொஞ்சம் நிதானித்து யோசிக்க வேண்டும் :

தவெக அரசாங்கம்தான் ஊழல் செய்து விட்டது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஃப்ராடு புத்தகங்களில் இந்த மாதிரி விஜய், திரிஷா என்று பெயர் வருகிற மாதிரி எந்த தவெக காரனாவது சப்ளை செய்வானா? கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவது போல் ஆகாதா இது?

இது, திட்டமிட்டு அவதூறு பரப்பும் வேலையாக இருக்க நிறைய வாய்ப்பு உண்டு. பிப்ரவரியில் ஆர்டர் போட்டாகி விட்டது. சப்ளை பண்ணும் போது அரசாங்கம் மாறி விட்டது. ஆகவே அவதூறு பரப்பவே இது போல செய்திருக்கலாம்! போலி ஆசிரியர் என்று பட்டவர்த்தனமாய்த் தெரிகிற மாதிரியா பெயரைப் போடுவார்கள்?

நூலகத்திற்கு நூல்கள் சப்ளை என்பது (அதுவும் புது நூலகத்திற்கு புது பதிப்பகம்) எவ்வளவு நீண்ட பிராஸஸ், எத்தனை மாதங்கள் ஆகும் என்பதெல்லாம் சப்ளை செய்யும் பதிப்பகங்களுக்குத் தெரியும்.

குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். மே மாதம் ஆட்சிக்கு வந்து, ஆட்சிக்கு வந்த அன்றைக்கு சாயந்திரமே ஆர்டர் போட்டாலும் ஜூன் மாதம் சப்ளை ஆகாது! அது மட்டுமில்லை. நூலகங்களில் புத்தகம் டெலிவரி ஆன அன்றே நூலக அக்கவுண்ட்டிற்கு எடுப்பதில்லை. அதற்கு 30 லிருந்து 45 நாட்கள் வரை ஆகும். புத்தகங்களில் காணப்படும் ரப்பர் ஸ்டாம்ப் அவை டெலிவர் ஆன நாள் கூட அல்ல, அக்கவுண்ட்டுக்கு எடுத்த நாள்!

ஆகவே இந்த ஊழலை தவெக அரசாங்கம் செய்திருக்க ஒரு சதவீதம் கூட சாத்தியம் இல்லை. மேலும், பேமெண்ட் யாருக்குப் போயிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய காரியம் இல்லை.

‘திறந்து வைப்பதில் என்ன பெருமை?’ என்று ஸ்டாலின் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார்! அதாவது எல்லாவற்றையும் திமுக அரசு பண்ணி முடித்து, திறந்து வைப்பதை மட்டும்தான் தவெக செய்துள்ளது என்பதைத் திரும்பத் திரும்பப் பதிவு செய்தார்! இப்போது, ‘நா இல்லே.. நா இல்லே’ என்று கதறுகிறார்கள்!

நூல் நிலையங்கள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வருவன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் துறை என்பது கவனிக்கத் தக்கது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன