
“என்னடா அது? எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கே?” என்று என் அருகில் வந்த நண்பன் என்னைக் கிண்டலாகக் கேட்டான்.
அந்தப் படத்தை அவனிடம் காட்டி, “உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று கேட்டேன்.
அதை வாங்கிப் பார்த்ததும்,
“இந்த மாதிரிப் படங்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப அலர்ஜி” என்றான்.
“ஏண்டா அப்படிச் சொல்ற?”
“சில கோடுகளை அவுங்க இஷ்டத்துக்கு இப்படி அப்படின்னு இழுத்து, பல வண்ணப் பூச்சுகளை அதுல தடவி, இதை ஒரு மாடர்ன் ஆர்ட்டுன்னு பெருமை பேசுவாங்க. புரியாத விஷயத்தைப் பூதாகரமாக்குவாங்க.”
அவன் சடசடவென்று பேசினான்.
“என்னடா சொல்ற?”
“ஆமாண்டா! அதுல என்ன இருக்கு? அந்தக் காலத்துல லதான்னு ஒரு ஓவியர் இருந்தாங்க. அவங்க படம் போட்டா கொழுக்கு மொழுக்குன்னு எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?”
மறுபடியும் அவன் பொரிந்து தள்ளினான்.
“ஏய் முட்டாள்! நிதானமா யோசி. உன்னையும் என்னையும் தான் வரைஞ்சிருக்கான்.”
“என்னடா சொல்ற?”
“பல முகங்கள்… பல உணர்வுகள்… தெரியலையா?”
அவன் மறுபடியும் படத்தைப் பார்த்தான்.
இந்த முறை அவன் முகத்தில் சிரிப்பு இல்லை.

அப்பிடிப் போடுங்க. நல்ல கற்பனை. கோர்வையா எழுதி அழகான கதையா கொடுத்திட்டீங்க. வாழ்த்துகள் சார்