
.
உண்மையில் மனைவிக்கு
அழகாய் கோலம்போடவராது…
அந்தஉண்மையைச் சொன்னால்
எனக்கு காலைகாப்பி கிடைக்காது.
அதோடு எனக்கு மற்றவர்கள் போல்
எழுதவரவில்லை என்ற வெகுமதியும் கிடைககும்..
அவரவர்இடத்தில்அவரவர்
இருந்தால்அபாயம் ஒன்றுமில்லை.
காலையில் நடைபயிற்சி
போனவனுக்கு நாக்கிற்கு நல்லநேரம் இல்லைபோலும்…
மனைவியிடம் காலையில்
கோலம் போட்ட பெண்ணிடம் நகைபறிப்பு
என்றுசொல்லிவிட்டேன்.
இப்போது அவள் கோலம்போடும்போது நீண்ட
குச்சியோடு காவலுக்கு நிற்பது எனது வேலையாகிவிட்டது.
மலையூர் மம்பாட்டியான்போல விறைப்பாய் நில்லுங்கள்
என்கிறாள் கிண்டலில்.
அதோடு போனால் பரவாயில்லை…
கோலத்தில் வண்ணப்பொடி நிரப்பும் வேலையும் எனக்கிருக்கிறது.
அரைஇருட்டில் வண்ணவேற்றுமை தெரியாமல்
வண்ணங்களை வாரியிறைப்பதாய்…
திருப்பள்ளியெழுச்சி இன்று நடந்தது.

மார்கழி இன்றுதான் தொடங்கியிருக்கிறது …
மற்றநாளெல்லாம் இனி எப்படியோ…?
