
“ஸ்ரீராம் சொல்வதைக் கேளுங்கள். ஸ்வாதியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஃபங்ஷனுக்கு அட்டெண்ட் பண்ணுங்கள்.”
“நோ ரம்யா, குடும்பத்துடன் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று ராகவ் சொன்னானே!”
நான்கு வயது நிரம்பிய ஸ்வாதி இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள். பார்த்துக்கொள்ளலாம் என்று விடாப்பிடியாகக் கூறி, ஸ்ரீராம் தன் மனைவி ரம்யா மற்றும் குழந்தை ஸ்வாதியுடன் திருமணத்திற்குச் சென்றான்.
ரிசப்ஷனின்போது புதுமணத் தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில், ஸ்வாதி அங்கே வந்தாள். அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய தூண் கீழே விழுந்து உடைந்தது. படபடவென்று சத்தம் கேட்டதும் எல்லோரும் நடுங்கிப்போனார்கள். ஸ்வாதி பயத்தில் அழுதாள்.
“பாப்பா தெரியாமல் பண்ணிடுச்சு” என்று நேரில் சொன்ன அதே வாய், “ஹைப்பர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தையை ஏன் கூட்டிக்கொண்டு வர வேண்டும்?” என்று புறம் பேசியது.
ரம்யா அவளைத் தூக்கிக்கொண்டு போய் சமாதானப்படுத்தினாள்.
“மம்மி, ப்ராமிஸா, அங்கே கேபிள் வயர் இருந்தது. அதில் தடுக்கித்தான் விழுந்தேன். நான் ஒண்ணும் செய்யல.”
உடனே அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். ஸ்ரீராமும் ரம்யாவும் கவலையில் ஆழ்ந்தனர்.
ஆனால் ஸ்வாதி அமைதியாக உட்கார்ந்து, மனிதர்களின் முகங்கள் பாதி மட்டுமே தெரியும்படி வரைந்தாள்.
