
என் பேத்தி ஆராபி இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள். ஆனால் அவள் விதம்விதமாய் படங்கள் வரைகிறாள். அதுவும் நவீன ஓவியங்கள். அவள் வரைகிற ஓவியங்களை புத்தக அட்டைப் படங்களாகப் பயன் படுத்துகிறேன்.
ஒருமுறை சென்னை வந்தபோது, ஒரு ஓவியத்தைக் காட்டினாள்.
ஆறு வயது குழந்தையா இப்படி ஓவியம் வரையறது என்று ஆச்ரியப்பட்டேன்.
அவள் வரைந்த ஓவியம்தான் விதம்விதமா முகங்களைக் காட்டுகின்ற ஓவியம். அவள் ஓவியத்தின் பின்னால் சிகப்பை அள்ளிக் கொட்டியிருந்தாலும், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவளுக்குச் சொல்ல வரலை.
“எதுக்காக இப்படி ஓவியம் வரையத் தோன்றியது?” என்று கேட்டபோது, “உன்னைப் பார்த்துதான் வரைஞ்சேன்,” என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்.

😂