
ரயில் பயணம் ஜன்னல் ஓரம்
காட்சிகள் பின்னோக்கி ஓடும் இருக்கை,
வயல்கள், மரங்கள், செடிகள், விலங்குகள்.
தாண்டிப் பின்னே விரையும் ரயில்,
வருடம், மாதம், நாட்கள், மணிகள்.
தாண்டித் தாண்டிக் கழியும் வாழ்க்கை போல்.
வெளியே யாவும் இருக்கும் இடத்தில்,
வேகமாய்ச் செல்வது பயணிக்கும் வாகனம்.
பார்க்கும் காட்சிகள் ரசனைக்கு மட்டுமே!
கூடவே நின்றால் ஊர் சேர முடியுமோ!
வாழ்க்கையின் ஓட்டமும் நிகழ்வுகள் தானே!
மலைத்து மயங்கினால் நகர்வது இயலுமோ !
நம் ஆயுளும் ஒரு நீண்ட ரயில் பயணமே,
ரசித்துக் கடந்தால் வாழ்வது சுலபமே!!!
