தமிழ்ச்செல்வன்/அக விளக்கு

அம்மா சலித்துக்கொண்டார். கோபாலன் எந்த வேலையுக்கும் போகாமல், ஓவியம் வரைவது, ஊர் ஊராகச் சென்று அந்தக் காலக் கோயில்கள், சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்த்து வரைவது என வாழ்க்கையை நடத்தி வந்தான். அதில் அவனுக்குக் கிடைத்த மகிழ்ச்சி அக விளக்காய் ஜொலித்தது. அது அம்மாவுக்குப் புரியாத விஷயம். கல்யாணம் என்பது அவனுடைய அகராதியிலேயே கிடையாது. ஓரளவு சொத்துகள் இருந்ததால் வாழ்க்கை வசதியாகப் போயிற்று.
தூரிகை, வண்ணங்கள் மற்றும் ஓர் அகல் விளக்கு எப்போதுமே அவனுடைய தோள்பையில் குடியிருக்கும். குடைவரைக் கோயில்களில் அகல் விளக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வெளிச்சத்தில் சிற்பங்களைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவனுக்குள் இருக்கும் அக விளக்கும் பிரகாசமாக ஒளிரும்.
கழுகுமலையின் மினி எல்லோரா என்று அழைக்கப்படும் வெட்டுவான் கோயிலை வரைந்து கொண்டிருந்தபோது, ஒரு பிரெஞ்சு ஓவிய ரசிகன் இவனது வித்தியாசமான தனித்திறமையைக் கண்டு வியந்து மெய்மறந்து நின்றான். கோபாலனின் ஓவியங்கள் சிலவற்றையும், அவனது கைப்பேசி எண்ணையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றான்.
பின்னர், இரண்டு ஓவியப் போட்டிகளுக்கு அவற்றை அனுப்பினான். அவற்றில் ஒன்று உலக அளவில் மூன்றாம் பரிசைப் பெற்றது. பரிசுத்தொகை ஒரு மில்லியன் டாலர்!
உலகத்தின் பார்வை இப்போது கோபாலனின் மீது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன