சுந்தர மணிவண்ணன்/அந்த ஓவியம்

அவன் அவசரமானான். இந்த இதழின் அட்டைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராக வேண்டும்.
தான் கொண்டு வந்த ஐந்தாறு ஓவியங்களை ஆசிரியரின் முன் வைத்து, அவரையே உற்றுப் பார்த்தான். ஆசிரியரின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
என்ன செய்வதென்று தெரியாமல்,
“சார், இதில் எதைத் தேர்ந்தெடுக்கலாம்?” என்றான்.
சிறிது நேரம் யோசித்த ஆசிரியர்,
“இது நமது முதல் இதழ். அட்டைப்படம் நன்றாக அமைய வேண்டும். நீங்கள் ஒன்று செய்யுங்கள். நான் சொல்லும் ஓவியரைப் போய்ப் பாருங்கள்” என்றார்.
அவன் அந்த ஓவியரைச் சந்திக்க ஆயத்தமானான்.
“சார், அவரிடம் என்ன சொல்லி அணுக வேண்டும்?” என்று கேட்பதற்கு முன், அவரே அவனிடம்,
“நான் எல்லாத் தகவல்களையும் ஃபோனில் சொல்லிவிடுகிறேன்” என்றார்.
“கலைக்கடல் கோபால்” அந்தச் சாலையின் ஓரத்தில் அவன் வரைந்த ஓவியம் அதைத்தான் சொன்னது.
“சார், உங்களைப் பார்த்து…” என்று அவன் முடிப்பதற்குள்,
“உங்கள் சார் எல்லா விஷயத்தையும் ஃபோனில் என்னிடம் சொல்லிவிட்டார்” என்றார் கோபால்.
“இன்னும் இரண்டு நாளில் அட்டைப்படம் தயாராகிவிடும். வந்து வாங்கிக்கொண்டு போங்கள்.”
“அகல் விளக்கையும் தூரிகையையும் கையில் ஏந்தியபடி ஒரு ஓவியன்!”
அந்த ஓவியத்தைக் கொண்டு போய் ஆசிரியரிடம் காட்டினான்.
“ஆஹா! நம் இதழின் ஆன்மாவை அதில் ஒளிரவிட்டிருக்கிறான்!”

One Comment on “சுந்தர மணிவண்ணன்/அந்த ஓவியம்”

  1. திறமை எங்கே ஒளிந்து கொண்டிருந்தாலும் அதைத் தேடிக் கண்டு பிடித்து வெளிச்சம் பாய்ச்சுவதுதான் பத்திரிக்கை ஆசிரியர்களின் வேலை. அதை இந்தக் கதை அழகாக சொல்கிறது. வாழ்த்துகள் சார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன