வி.கே. லக்ஷ்மிநாராயணன்/எலிமினேஷன்

போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த வருண், தன் கையில் சுருட்டி வைத்திருந்த பேப்பரை விரித்து, தன் நண்பரான இன்ஸ்பெக்டரிடம் காட்டினான்.
மீசை, தாடி, ஏராளமான தலை முடிக்கற்றைகள், கண்ணாடி, ஒரு கையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு, மறுகையில் தூரிகை — இவற்றுடன் ஒருவர் ஓவியமாகக் காட்சியளித்தார். வருண் வரைந்த ஓவியம் இது.
“யார் இவர்?”
“இவர் சுதர்ஸன். பிகாஸோ ஓவியக் கல்லூரியின் ஓனர். இவரோட மகளும் நானும் உயிருக்கு உயிராகப் பழகுறோம். அது இவருக்குப் பிடிக்கவில்லை. நான் இவர் மகளை மறக்கணுமாம். இல்லையென்றால், என்னை இந்த உலகத்தை விட்டே எலிமினேட் பண்ணுவதாக மிரட்டுகிறார்.”
“ஓகே. கம்ப்ளெயிண்ட் ஒண்ணு எழுதிக் கொடுங்க. நான் பார்த்துக்கறேன்.”
வருண் கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.
இதைச் செவிமடுத்துக் கேட்ட, சுதர்ஸனுக்கு வேண்டிய கான்ஸ்டபிள் ஒருவர், ரகசியமாகச் சுதர்ஸனுக்குத் தெரிவிக்க, திடுக்கிட்ட சுதர்ஸன், டைம் பீயிங்குக்கு வருணின் எலிமினேஷனைத் தள்ளிப்போட்டார்.
ஆனால், அதற்கு முன்னாலேயே மாரடைப்பால் சுதர்ஸனை இந்த உலகத்தை விட்டே எலிமினேட் செய்துவிட்டார் கடவுள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன