
“அந்தப் பெரியவர் ஓவியம் எல்லாமே அட்டகாசமாக வரைவாருங்க. தத்ரூபமாக இருக்கும்” சொல்லிக் கொண்டே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை ஓவியத்தின் மேல் வைத்துவிட்டு கையால் ஆஞ்சநேயரை இல்லை அந்த ஓவியத்தை ஒற்றிக்கொண்டாள் மந்தாஹினி.
“ஏம்மா நம்ப புது வீட்டுல வரவேற்பரையில இவரை ஒரு ஓவியம் வரையச் சொல்லலாமே?” என்ற பிரசாந்திடம் “சூப்பர்ங்க, நல்ல ஐடியா” என்றவள் சாலையோர ஓவியரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள்.
மறுநாள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் கேட்டப் பொருட்களையெல்லாம் வாங்கித் தந்தனர்.
ஒரு நல்ல மார்டன் ஆர்ட் அவரிடம் தரப்பட்டது. ஆனால் அவர் விரும்பியது ஒரு அழகான ஜடாமுடியுடன் கூடிய சிவபெருமான் முகம். சம்மதம் தெரிவித்தனர் மந்தாஹினியும் பிரசாந்தும்.
ஓவியத்தை வரைந்ததும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கின் ஒளியில் நெற்றிக்கண் நாயகனின் கண்களின் ஒளியின் ஜ்வாலையின் தீட்சண்யத்தை ரசித்தார் ஓவியர். தூரிகை கையைவிட்டு அகலவில்லை.
அடுத்தடுத்து வரைந்திட ஆவலாக காத்திருந்தது.
