
“இந்த ஓவியத்துல உனக்கு என்ன வித்தியாசமா தெரியுது?” என்று நண்பன் கேட்டான்.
“ஒரு ஓவியர் தன்னைத் தானே மனக்கண்ணில் பார்த்து வரைந்திருப்பார் போலிருக்கிறது. வலது கையில் வண்ணத் தூரிகை, ஆனால் இடது கையில் வண்ணக் கலவைக்குப் பதிலாக அகல் விளக்கு இருக்கிறது” என்றேன்.
“நன்றாக உற்றுப் பார். அந்த அகல் விளக்கு அவரது இடது கையில் இல்லை. அவரது உடையில்தான் இருக்கிறது. அவர் தனது கையை அங்கு வைத்திருப்பதால், அகல் விளக்கைப் பிடித்திருப்பது போலத் தோன்றுகிறது” என்றான் அவன்.
சரிதான் என்று ஒப்புக்கொண்டேன்.
