நெல்லை.க.சோமசுந்தரி./ஒற்றை இலை

நினைவுகளின்
சுழற்சியில்…
நித்தமும் பயணிக்கிறது
உதிர்ந்த பூக்களின் கனவுகள்!

காலக் குறிப்புகளின்
பக்கத்தில்
எந்த மை கொண்டும்
எழுத முடியாத
வரைவுகள் அவை!

உறைந்த பனிப்பாளங்களின்
உடைதலில் மெல்லிய விசும்பலொளியாய்
எவருக்கும்
கேட்காது நீரில்
கரைகிறது!

எங்கோ கேட்கும்
சங்கின் ஒலியில்
சமுத்திரத்தின்
சுவாசம் அலை அலையாய்
காதில் விழுகிறது

அடர் மௌனத்திற்குள் எந்த சொற்களைத் தேடுவாய்!

அன்பின் அத்தனை ஈரத்திலும்
உலர்ந்து நிற்பது புரிபடாத
ஒற்றை‌ உயிர்த்துளி தானே!

மிச்சமிருக்கும் பொழுதுகளிலும்
மீண்டும் நழுவட்டும்
ஒற்றை இறகாய்
பறத்தலின் கனம் அறியாது
சருகான…
பெரு மரத்தின் ஒற்றை இலை!

🌷

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன