எஸ்ஸார்சி/சரசுவதி பூசை

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அதற்கொரு குணமுண்டு
இப்படியா பொருள் கொள்வது
பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப்
புத்தகம் வாங்கியதில் கொள்ளை.
செயற்கை நுண்ணறிவு புத்தக
ஆசிரியனாகி புத்தகங்கள் பிரசவம்
நோக அடிக்கும்
நூலாசிரியர் பெயர்கள்
புத்தகங்கள் விலைக்கும் பக்க எண்ணிக்கைக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது
விலை வைப்பதில் அடித்தது கொள்ளையோ கொள்ளை
அறிவின் பேரால் வஞ்சிக்கும்
அக்கிரமத்தை எந்த ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தார்களோ
தோண்டத்தோண்ட வருகிறது நிர்வாகக் குப்பை
புத்தகங்கள் பெறுவதில் தான் எத்தனை மாய்மாலங்கள்
ஒரு நூலகம் திறக்க ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்னும்
விக்டர் ஹியூகோ வாக்கைக்
பொய்யாக்கிய சதிகாரர்கள் நம்மோடு
சகஜமாய் உலா வருகிறார்கள்
நமக்குத்தான் தெரியவில்லை அடையாளம்
நூலகத்திற்குச் செல்லாதீர் இனி பெற்ற அறிவும் வற்றிப்போக
வாய்ப்புண்டு ஆண்டுக்காண்டு சரசுவதி பூசை வரலாம்
புத்தகத்தை ஆராய்ந்து படையுங்கள்
நாலடியார் எழுதிய
சமண முனிவர்கள் விலாசம்
தொலைத்தது எத்தனைக் கீழ்மை
தமிழ் எங்கள் உயிர்
தமிழைப்பழித்தவனை
தாய்தடுத்தாலும் விடோம்
சவடால் விடுவதில் சளைத்தவர்களா நாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன