
வண்ண விளக்குகள் வீடு நிறைக்க,
வாசல் முழுவதும் கோலம் மிளிர,
இனிய பலகாரங்கள் மணம் வீச,
இதயம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க!
பட்டாசு ஓசை வானில் ஒலிக்க,
பாசத்தின் தீபம் உள்ளத்தில் எரிய,
இருள் நீங்கி ஒளி பிறக்க,
இல்லம் தோறும் இன்பம் பெருக!
தீமை அழிந்து நன்மை மலர,
துன்பம் மறைந்து இன்பம் தழைக்க,
அன்பும் அமைதியும் உலகில் நிலைக்க,
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
( 13.11.2026 அன்று விருட்சம் இணைய கவியரங்கில் ” கவிதை வாசிக்கலாம் வாங்க” நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை)
