
கவிதை இப்போது
முற்றிலும் மாறிவிட்டது
எழுதுபவர்கள்
அவர்களுக்கும் புரியாமல்தான்
எழுதுகிறார்களென்று தோன்றுகிறது
வாசிப்பவர்கள் ஓரளவு புரிந்து கொள்கிறார்கள்
கவிதை அரங்கில் யாரும் கவிதை வாசிக்க வருவதில்லை
புத்தகமாகக் கொண்டு வந்தால்
அவர்களே
வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால்
புத்தகமாகவும் போடுவதில்லை
எழுதுபவர்கள் வீட்டில்
கவிதைகள் நடை போடுகின்றன
யாரும் சீண்டுவாரின்றி
[11:10, 14/11/2026]
