கி. பார்வதி/அறம் செய விரும்பு

சாரதா மிஸ்ஸின் வகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தமிழாசிரியை என்றாலும், பாடத்தைக் கடந்து பல நல்ல விஷயங்களை மாணவர்களுக்குப் போதிப்பதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.
அவர் வித்தியாசமான ஓவியங்களை மாணவர்களிடம் காட்டி, “இந்த ஓவியங்கள் சொல்வதென்ன? இவை உணர்த்தும் பாடம் என்ன?” என்றெல்லாம் அடிக்கடி கேட்பதுண்டு.
இன்றும் கையில் ஒரு ஓவியத்துடன் உள்ளே நுழைந்தார்.
ஒரு மாணவன், “இந்த ஓவியமே அழகாக இல்லை. இதிலிருந்து கற்றுக்கொள்ளப் பாடம் ஏதுமில்லை” என்றான்.
அடுத்தவன், “கையில் தூரிகை இருப்பதால் இவர் ஒரு ஓவியராக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முகபாவத்துடனும் உருவத்துடனும் இருக்கிறார். இடது கையில் விளக்கு. இது சொல்லும் பாடம் என்னவென்று புரியவில்லை” என்றான்.
மூன்றாமவன், உடல் நலப் பயிற்சி ஒன்றில் தான் கற்றுக்கொண்டதை இந்த ஓவியத்துடன் தொடர்புபடுத்தி, தான் புரிந்துகொண்டதை விளக்கினான்.
“தூரிகை என்பது நம் செயல்கள். எரியும் விளக்கு நம் அகத்தின் உண்மை ஒளியைக் குறிக்கிறது. நாம் செய்யும் செயல்கள் யாவும் அறம் சார்ந்திருத்தல் வேண்டும். அறமற்ற செயல்கள் நெடுநாட்கள் நிலைப்பதில்லை.”
சரியான விளக்கம் சொன்ன மாணவனுக்கு ஓர் அழகான பேனாவைப் பரிசளித்து ஊக்கப்படுத்தினார் ஆசிரியை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன