முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”ஸ்வீட்” மாமியார்

பங்கஜம் அம்மாவிற்கு உடம்பில் எக்கச்சக்கமாகச் சர்க்கரை அளவு இருந்தது. எல்லா வைத்தியங்களையும் பார்த்தாயிற்று. சிறுகுறிஞ்சான் கீரையைக் கொடுத்தால் சர்க்கரை அளவு குறையும் என்பதால், அந்தக் கீரையைத் தேடி அலைந்தாள் அவளுடைய அன்பு மருமகள் பவித்ரா. கிடைத்தபாடில்லை.
அன்று காலை, கையில் இரண்டு பைகளில் அந்தக் கீரையைச் சுமந்தபடி வீட்டுக்கு வந்தாள், பவித்ராவின் பரிந்துரையால் அந்த வீட்டில் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்திருந்த பணிப்பெண் ஸ்வப்னா.
“ரோட்டில் பிச்சை எடுக்கிறவளையெல்லாம் இரக்கப்பட்டு வேலைக்குச் சேர்க்கச் சொல்ற பவித்ரா! இவளுக்கு மொழியும் புரியல…” என்று மறுத்த தன்னிடம், பவித்ரா போராடி ஸ்வப்னாவை வேலைக்குச் சேர்த்த நிகழ்வைப் பங்கஜம் கண்ணீருடன் நினைத்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன