லீலா ராமசாமி /கைமேல் பலன்

பழமையான கொல்கத்தா வீதியின் டிராம் தண்டவாளங்களை ஒட்டி, இரு கைகளிலும் கனமான காய்கறிப் பைகளுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தாள் மீனா.
“இன்று இந்தச் சரக்குகளைச் சரியான நேரத்தில் சேர்த்துவிட்டால், என் மகனின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிடலாம்” என்ற எண்ணமே அவள் நடையின் வேகத்தைக் கூட்டியது.
அந்தப் பழைய கட்டிடத்தின் திருப்பத்தைக் கடக்கும்போது, எதிரே வந்த பெண்மணி ஒருவர் மீனாவின் மீது மோதினார்.
மீனாவின் பைகள் சரிந்து, கீரைகளும் காய்கறிகளும் சாலையில் சிதறின. பதறிய மீனா, “மன்னிச்சிடுங்க அம்மா” என்று கூறி அவற்றை அள்ளத் தொடங்கினாள்.
அந்தப் பெண்மணியும் கோபப்படாமல், கீழே சிதறிக் கிடந்த கீரைக் கட்டுகளையும் காய்கறிகளையும் எடுத்து மீனாவிடம் கொடுத்துவிட்டு, நகரத் தொடங்கிய டிராமில் அவசரமாக ஏறினாள்.
மீனா கீரையைப் பையில் ஒழுங்காக வைக்கும்போதுதான், அந்தப் பெண்மணியின் சங்கிலி கீரைக்கட்டில் சிக்கியிருந்ததைப் பார்த்தாள்.
உடனே அதை எடுத்துக்கொண்டு டிராமில் இருந்த அந்தப் பெண்ணிடம் ஓடினாள்.
“அம்மா! இந்தாங்க உங்க சங்கிலி!” என்று அவளிடம் கொடுக்க, அவள் அதைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில் டிராம் வேகமெடுத்தது.
அப்போதுதான் தன் கையில் நூறு ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டு இருந்ததைப் பார்த்தாள் மீனா. அதில் அந்தப் பெண்மணியின் நன்றி தெரிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன