மடிப்பாக்கம் பிரபாவதி/தாயம்மா

மிகவும் சோர்ந்து காணப்பட்டாள் தாயம்மா.
“என்னாச்சு, இன்னைக்கு உம்முனு இருக்க?” என்று மச்சு வீட்டு பார்வதி கேட்டாள்.
“என்னத்த சொல்லம்மா? தீபாவளி முடிஞ்சதிலேருந்தே வியாபாரம் இல்ல.”
“அடப்பாவமே!”
“எல்லாம் ஊருக்குப் போயிட்டாங்க. மழை வேற பிச்சுக்கிட்டு ஊத்துது. கீரை விக்கவே இல்லக்கா. ஒரு வாரமா சேத்து வச்ச காசெல்லாம் செலவாகுது. மருந்து வாங்கக்கூட காசில்ல. கொஞ்சம் டீ தண்ணி குடு அக்கா” என்றாள்.
“நீ அந்தக் கீரையை இங்கே வச்சிட்டுப் போ. நான் மாட்டுக்குக் கொடுத்துக்கிறேன். கொஞ்சம் ரூபா தரேன். பூ வாங்கித் தொடுத்து வியாபாரம் பண்ணு. ஒரு இடமா அலையாம கடையைப் போட்டுக்க.”
“வெயில் வந்ததும் கீரையையும் கொஞ்சம் வச்சுக்கோ. அதையும் வித்துக்கோ” என்று பார்வதி யோசனை சொன்னாள்.
“மாரியாத்தா மாதிரி வந்திருக்கம்மா. நல்ல வழி சொல்லிப்புட்ட. கொஞ்சம் கொஞ்சமா உன் பணத்தைத் திரும்பத் தரேன் மா” என்றாள் தாயம்மா.
“நீ ஒண்ணும் காசு தர வேண்டாம். கீரையும் பூவும் எனக்கு வேண்டும்போது கொடுத்துடு. கணக்கு வச்சுக்கோ. லாபமும் வரும். கடனும் அடைஞ்சிடும். வா, கொஞ்சம் உப்புமா இருக்கு. சாப்பிட்டுட்டு டீ குடி” என்ற பார்வதி தெய்வமாகவே தெரிந்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன