அழகியசிங்கர்/கௌரி

கௌரி அந்த வீட்டிலேயே இருந்துவிட்டாள். அவளுக்கு வேறு போக்கிடம் கிடையாது.
கண்ணில்லாத பாட்டியை அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். பேருக்குத்தான் அவளுக்கு ஒரு புருஷன். அவனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
தினமும் ஐந்தாம் தேதி அவளைப் பார்க்க வருவான். அவளிடமிருந்து சொற்ப சம்பளத்தை வாங்கிக்கொண்டு போய்விடுவான்.
அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், வேலைக்கு மட்டும் போக மாட்டான். அல்லது, எந்த வேலையிலும் யாரும் அவனைக் கூப்பிட மாட்டார்கள்.
கௌரி அந்த வழியாகத்தான் எப்போதும் வருவாள். ரயில் தண்டவாளங்களைத் தாண்டிக் குறுக்காக வருவாள்.
கையில் பை நிறையக் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வருவாள். அவள் தங்கியிருக்கிற வீட்டிற்கு அவள் செய்கிற தினசரிக் கடமை அது.
அன்று வெள்ளிக்கிழமை. தண்டவாளத்தைத் தாண்டும்போது செருப்பு தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டது. செருப்பை மீட்டுக்கொண்டு வருவதற்குள் வேகமாக வந்த ரயில் அவளைக் கடந்து சென்றுவிட்டது.
அவள் வாங்கி வந்த காய்கறிப் பைகள் எங்கோ தூக்கி எறியப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன