
ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள ஒரு நகரத்தில் அந்த நான்கு சிறுவர்களும் பேசுவதைத் தமிழில் கேட்போமே!
“இப்போது நம்மை எங்கே கூட்டிக்கொண்டு போகிறார்கள்?” என்று ஒருவன் கேட்க, “ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிடக் கூட்டிக்கொண்டு போகிறார்கள்!” என்று இன்னொருவன் நக்கலாகச் சொல்லிச் சிரித்தான்.
“பிச்சை எடுக்கத்தானே நம்மை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார்கள்? இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?” என்று மூன்றாவது பையன் கேட்க, “வேறொரு நாட்டில் உள்ளவருக்கு நம்மை விற்றுவிட்டார்களாம்” என்று நான்காவது பையன் பதில் கூறினான்.
“எதற்காக நம்மை விற்றார்களாம்?” என்று கேட்டவனுக்கு, “வறுமையில் வாடும் நம் நாட்டில் பிச்சை எங்கே கிடைக்கிறது? நம்மை வைத்துத் தொழில் செய்ய முடியாமல்தான் விற்றுவிட்டார்களாம்” என்று மீண்டும் சிரித்துக்கொண்டே சொன்னான்.
“எப்படிடா உன்னால் சிரிக்க முடிகிறது? நாம் என்ன அமெரிக்காவுக்கா போகப் போகிறோம்? எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்று தெரிந்தால் சொல்லித் தொலைடா!”
“நம்மோடு சேர்த்து பத்து பேரைப் படிக்க வைப்பதற்காக அந்தத் தொழிலதிபர் விலைக்கு வாங்கியிருக்கிறாராம்.”
மீதமிருந்த மூன்று பேரும் கோரஸாக, “எந்த நாடுன்னு சொல்லு! சர்ப்ரைஸ் தாங்க முடியல!” என்றனர்.
“டேய் பசங்களா, இனி நாம் சந்தோஷமாக இருக்கப்போகும் நாடு ‘இந்தியா!'”
