
கோவையின் பிரபல முதியோர் இல்லம் அது. சீனியர் சிடிசன் பாரடைஸ் என்பார்கள் .
மனைவி இறந்தபின்நான்கு வருஷமாக கோவிந்தன் அங்கு தான் வசிக்கிறார்.
அன்று அந்த இல்லத்தில் உள்ளவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி.
“பிரார்த்தனை கீதம் பாடவருகிறார் நம் இல்லத்திற்கு புதிதாக வந்திருக்கும் கோதைநாச்சியார்” என்றதும் அந்தப்பெயர் அவரை தூக்கிவாரிப்போட்டது. கோவிந்தன் திகைத்து போய் நிமிர்ந்து மேடையை பார்த்தார். நாற்பது வருஷம் முன்பு ஜாதி வித்தியாசம் காரணமாக கைவிடப்பட்ட,அவருடைய உயிர்க் காதலி.அதே முகம்.பூசினாற்
போன்ற உடல்.மூக்குக்கண்ணாடி. மனதில் பதிந்த உருவம்.
பாடும்போது
அதே இனிய குரல் அதைவிட அவரைதிகைக்கவைத்தது அவருக்குப் பிடித்த அதே பாட்டு …
காற்றினிலே வரும் கீதம்.
நிகழ்ச்சி முடிந்தது. தனியாக சந்தித்து விவரம்கேட்டார்.
கணவர்மறைந்து
பலவருடமாயிற்றாம்.
ஒரே மகன் அமெரிக்காவில்.
பணம்அனுப்புவதுடன் சரி .இந்தியா வருவது இல்லையாம்.
கோவிந்தன் மேல் கொண்ட காதலை மறக்க முடியாமல்குடிகாரப்புருஷனுடன் இயந்திர வாழ்க்கை வாழ்ந்ததை கோதை சொல்ல கோவிந்தன்கண்கலங்கினார். பேசியபடி வந்தபோது மழைத்தூற ஆரம்பித்தது.
சட்டென கையில் இருந்த குடையை கோவிந்தன் விரித்தார்.
“இனி கோதை என்குடைக்குள்!” என்றார்.
