
“ஹலோ மாதவன்! என்னைத் தெரிகிறதா?”
அடைமழைக்கு அஞ்சி, பஸ் ஸ்டாண்டில் நுழைந்து குடையை மடித்த மாதவனிடம் கேட்டாள் கமலா.
மாதவன் இன்ப அதிர்ச்சியுற்றார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அவர் வந்தவாசியில் படித்துக்கொண்டிருந்தபோது காதலியாக இருந்தவள் இந்தக் கமலா.
படிப்பு முடிந்ததும் சென்னையில் தபால் துறையில் வேலை கிடைத்தது. அதன் பிறகு கமலாவின் தொடர்பு அறுந்துபோனது. இப்போது நேரில் வந்திருக்கிறாள்.
“கமலா, இத்தனை வருஷம் கழித்தாவது என் ஞாபகம் வந்ததே சந்தோஷம்!”
“ஓ! ஸாரி மாதவன்! நம்ம காதலுக்கு எங்க வீட்டில் அனுமதி தரல. நானும் வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தேன். கடைசியில் எங்க அம்மாவும் அப்பாவும் போய்ச் சேர்ந்தாங்க.”
“கமலா, எங்க அம்மாவும் காலமாகிவிட்டாங்க. நானும் அன்மேரீட். ஆமா, நீ இங்கே எதற்காக வந்தே?”
“என் ஃப்ரெண்டின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்காக வந்தேன்.”
“சரி, வாட் அபவுட் யுவர் ஃபியூச்சர்?”
“தட் ஈஸ் வித் யு!”
என்று கூறி, மாதவனிடமிருந்து குடையை வாங்கிப் பிரித்து, அவரோடு மழையில் இணைந்து நடக்க ஆரம்பித்தாள் கமலா.
