
பட்டணத்துச் சாலைக்கு பதினாறுமைல் நடந்து
சினிமாவைப் பாத்துவந்த செலவெல்லாம் கனவாச்சு
டட்டணுக்கு ராட்டினத்தில் டங்குடங்கு ஓசையிலே
சங்கீதம் கேட்டபடி சுத்திவந்து சோர்ந்தாச்சு
ஒப்படிக்கும் வயலுக்கும் ஓடிஓடி வேலைசெஞ்சு
நெல்லடிச்சுக் குமிச்சுவச்ச நேரமெல்லாம் போயாச்சு
இப்படிக்கும் அப்படிக்கும் குதிச்சுத் தாண்டிப்போன
இளவட்ட விளையாட்டு எல்லாமே முடிஞ்சாச்சு
வயக்காட்டுச் சகதியிலே வழுக்காம குடமிரண்டை
இடுப்பிலேயும் தலையிலேயும் ஏந்தி வந்து ஓஞ்சாச்சு
வெயில்காட்டு வேலையிலே வேகாம வெந்து போயி
கருவமரம் வெட்டிவந்து கரியாக்கிக் காஞ்சாச்சு
குனிஞ்சு நாத்துநட்டு வேர்வையிலே குளியலிட்டு
விவசாய வேலைசெஞ்ச விறுவிறுப்பு வடிஞ்சாச்சு
கனிஞ்சும் கனியாத புளியந் தோட்டையெல்லாம்
கையாலே ஒடச்சு காய்ச்சு முடிஞ்சாச்சு
முந்தாநா நடக்கையிலே முடியாம விழுந்தேண்டி
மூச்சு படபடத்து முன்நாக்கு தள்ளுதடி
எந்தாயி பொறப்புகளே எந்திருச்சு வாரீகளா
இடுப்பொடிஞ்சு கிடக்கேண்டி இப்பவே வாரீகளா

முதுமையின் இயலாமையை உருக்கமாக விளக்கும் நாட்டுப்புற மெட்டில் அமைந்த இனிய பாடல்! இன்று (18-12-2021) விருட்சம் ஜூமரங்கில் வாசித்தபோதே மெய்ம்மறந்தேன்!
Thank you Ji
பட்டினத்துச் சாலையிலே பதனாறு மைல் நடந்து
மீச்சு படபடத்துமுன்நாக்கு தள்ளுதடி
அருமை சார்.