
கோயில் மணியோசை வந்து
காதில் இறங்கியது போல
கோபுர மணிப்புறா ஓன்று
கொஞ்ச வந்தது போல
மேகப் பொதியில் ஓன்று
மெத்தென மோதியது போல்
தூறல் மழைச் சாரல்
தொட்டுத் தடவியது போல
தெக்குத் தென்றல் என்னைத்
தேடி வந்தது போல
முல்லைப் பூவின் வாசம்
மூச்சில் நிறைந்தது போல
கன்றுக் குட்டி ஒன்று
துள்ளி வந்தது போல
பிஞ்சுக் குழந்தை ஒன்றின்
விரல்கள் தீண்டியது போல
சொர்க்கம் இதுவென்று மனம்
சொக்கிப் போனது போல
பக்கம் நீ வந்து மெல்ல
பட்டு அமர்ந்த போது

“சொர்க்கம் இதுவென்று மனம்
சொக்கிப் போனது போல
பக்கம் நீ வந்து மெல்ல
பட்டு அமர்ந்த போது” –
இதில் “போல” என்பதை நீக்கிவிட்டால் கவிதை நிறைவு தரும் என்று ஒரு ரசிகர் என்னிடம் தெரிவித்தார்!
True , Thank you Ji