ஞானம்/லாவண்யா சத்யநாதன்

தவம் செய்து
பெற்றதில்லை.
வரம் வாங்கி
வந்ததில்லை.
தற்செயலாய்
வாய்த்த பிறவி.
நிரந்தரமில்லை.
இன்னொருமுறை
புவிக்கு வருவது
நிச்சயமில்லை.
இருப்பது பொய்
இல்லாமல்போவது மெய்யென
ஆசைகளறுத்து என்ன செய்யப்போகிறேன்?
இருக்கும்வரை சுகப்பட்டு
உயார் ஊசலாடாமல்
திருப்தியாய் போகலாமென்று நினைத்தேன்.
உணவை மட்டும்தான்
போதுமென்று சொல்கிறது மனம்.

புரிந்துகொண்டேன்.

2 Comments on “ஞானம்/லாவண்யா சத்யநாதன்”

Comments are closed.