நகுலனின் சுசீலா

நான்கைந்து ரூபாய்கள் செலவழித்தால்
கும்பகோணத்துக் கடைத் தெருவை
வாங்கிவிடலாமென்று
கனவு கண்ட சோமு முதலியார்
கடைசியில் சோமுப் பண்டாரமாகி
திடீரென ஒருநாள் செத்துக் கிடந்தார்

சுசீலாவும் ஒருநாள்
செத்துக் கிடந்ததாய்
நகுலன் சொன்னார்
சுசீலாவின் ரோமபந்தி
தனியாய்க் கிடந்ததாய்க்
கூறவும் செய்தார்
ஆனால் சுசீலா போனது
தெருவிலா வீட்டிலா?
O
