தழும்பு/அதிரன் (சு . இசக்கியப்பன்)

மாலை 5 மணி
என்ன சொல்லு …
என்று மனைவியின் போன் காலுக்கு சலிப்புடன் அலுவலகத்தில் இருந்து பதில்சொல்லிக்கொண்டற்றிருந்தான் ….
யாரோ ஒரு அம்மா உங்களை பார்க்கனுமாம் …சாயாங்காலம் கவுன்சிலிங் வரலாமான்னு கேட்டாங்க …
இன்னைக்கு முடியாதுனு சொல்லிடு …எனக்கு ரெம்ப டயார்ட இருக்கு நாளைக்கு வரச்சொல்லு ..
சரிங்க …. இணைப்பு துண்டிக்கப்படுகிறது ……
இரண்டுமணிநேரத்திக்கு பிறகு தனது காரை ஓட்டி கொண்டு வீட்டிற்க்கு கிளம்புகிறான் ..
இன்னும் 45 மணித்துளிகள் ஆகும் அவன் தன் வீட்டை அடைவதற்க்கு …..
வழக்கும்போல் எண்பதுகளின் illaiayraja பாடலுடன் பயணம் தொடர்கிறது ….
டீசல் கார் என்பதால் அதன் சபித்ததில்லே கணவன் வருகையை மனைவி அறிந்தாள்
கேட் விசாலமாக திறக்கப்படுகிறது கார் மிக்கவனமாக போர்டிக்கோவில் நிறுத்த படுகிறது
டூம் லைட் வெளிச்சத்திலும் R . ராம்குமார் Msc ( physcology ) , MBA ( HR) –
மனிதவளம் மற்றும் மனநல ஆலோசகர் என்ற போர்டு பளிச்சென்று தெரிந்தது …
ஏன் ரெம்ப tired இருக்கீங்க ?? என்ற மனைவின் கேள்விக்கு வழக்கம்போல் தலையைமட்டும் அசைத்தான் …
சோபாவில் சாய்த்துக்கிடந்தவனை பார்த்து coffee வேனா தரவா என்றாள்
உம்…. என்றான்
எங்க அந்த அம்மா திரும்பவும் போன் பண்ணுனான்ங்க ….
எங்கேயிருந்து ?? என்று coffee ஐ கையில் ஏந்திக்கொண்ட கேட்டான்
பக்கத்துலதானிருக்கம்மா அவங்க வீடு .. எதோ . குடும்பபிரச்சினையாம் உங்ககிட்ட கவுன்சிலிங் வரலாம்னு கேட்டாங்க
நீ என்ன சொன்ன ??..
.. அதான் நாளைக்குனு சொல்லசொன்னீகளே …. சொல்லிட்டேன் ..
சற்று நேரத்தில் டீ ஷிர்ட்டும் முக்கால் டவுசர் சகிதமா நியூஸ் பேப்பர் ருடன் சப்தமில்லாம் அடங்கிப்போனான் . …
ஏங்க … என்ற மனைவின் குரலுக்கு எரிச்சலுடன் எரிட்டிடுப்பார்த்தான் ….
நாப்கின் வேணும் என்றவளை முறைத்து பார்த்தான் …..
என்னக்குயில்லை பாப்பாக்கு என்றவுடன் சர்வமுமடங்கிப்போனவனாக எந்தனை ?? என்று அமைதியா கேட்டான்
இப்ப கடைஇருக்குமா??.. என்று கேட்டவளுக்கு தலையை மட்டும் அசைத்தான்
வார்த்தைகளை அளவாக பயன்படுத்தவேண்டும் என்று நினைப்பவன்
இப்போதைக்கு ஒரு பாக்கெட் போதும் என்றாள் ….
அவன் மெதுவாக ரோட்டை கடந்து எதிர்திசையில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்து சென்றான்
ஒன்றுன்றாக நான்கைந்து கடைகள் வரிசையாக இருக்கும் .குடிமகன்களுக்கு பயந்து மெடிக்கல் ஷாப்பை
தவிர மற்ற எல்லா கடைகளையும் இரவு 8 மணிக்கெல்லாம் மூடிவிடுவார்கள் .
மெடிக்கல் ஷாப்பில் கூட்டம் அதிகமாக இருக்கவே அவன் அங்குஇங்கும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்
ஏதோ ஒரு பெண்குரல் இடதுபுரத்தில் இருந்து கேட்க்க மெதுவாக தலையை பக்கவாட்டில் திருப்பி நோட்டம் விடுகிறான்
சுமார 10 அடி தூரத்தில் ஒரு ஆணும் பெண்னும் சண்டையிடுவதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் …
அதில் அந்த பெண்ணின் பதைபதைப்புதான் அதிகமா தெரிந்தது .. அவர்களின் உடல்மொழியை பார்த்தால் ஏதோ காதல் விவகாரமாக்கத்தான் தோன்றியது அவனுக்கு …. சற்றுநேரத்தில் அந்தப்பெண் அழத்தொடங்கிவிட்டாள் …. அந்த ஆண் மெதுவாக கழன்று சென்றுவிட்டான் ..
செய்வதறியாமல் இந்த காட்சிகளை ஒரு சாட்சியாக பார்த்துகொண்டடிருந்தான் ராம்குமார் ..
அதற்குள் . அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சென்றுவிட்டால் ….அந்த பெண்
நாப்கின் வாங்கிவிட்டு வீட்டுக்குவந்தவன் மனைவிடம் தான் பார்த்த … விவகாரத்தை விவரிக்கிறான் .
வேற வேலையில்லை இதுகளுக்கு …. பட்டப்பகலிலே நடக்குது ..நீங்க பேசமாபோய் தூங்குங்க என்றாள்
காலை 6 மணி …..
….வாக்கிங் போய்ட்டுவரேன் ………என்றான்
ம் … எதோ இன்னைக்கு சீக்கரம் ஆஃபீஸ்போகணுமின்னு சொன்னீங்க.. ..
….தேங்க்ஸ் . என்றுசொல்லிக்கொண்டே மெதுவாக நடக்க துவங்கினான் ….
வழக்கமாக பத்து நிமிடத்தில் அருகில் இருக்கும் குளத்திற்கு வந்துவிடுவான் ….கொஞ்சநேரம் இயற்கையை ரசித்துவிட்டு மீண்டும் நடைப்பயிற்சியை தொடர்வான் ..
இன்று வழக்கத்துக்கு மாறாக அந்த குளத்தை சுற்று ஒரே ஜனக்கூட்டம் …. எதிரில் வந்தவரிடம் என்னவென்று கேட்க்கிறான் …. எதோ sucide கேஸ் மாதிரி இருக்கு சார் என்றான் …..
அதற்க்கு மேலே நடக்க மனமில்லாமல் வீடுதிருப்புகிறான் …..
என்ன சீக்கிரமே வந்துடீங்க என்றுகேட்டவளிடம் …….தகவலை பரிமாறுகிறான் .
அதான் நம்ம அஸோஸியேஷன் வாட்ஸுப்பில் குரூப்பில் வந்திடுச்சே என்று அந்த போட்டோவை காட்டுகிறாள் …… மஞ்சள் சுடிதாருடன் கரையொதுங்கிய பெண்ணின் உடல் ..
பார்த்தான் …..உடலெல்லாம் நடுங்கியது வேர்த்துஊத்தியது அவனுக்கு ….
என்னங்க என்னாச்சு ….. ஒண்ணுமில்லயே … என்று பதறிப்போனாள்……
இந்த பொண்ணுதான்மா நான் நேத்து ராத்திரி மெடிக்கல் ஷாப் பக்கத்தில் பார்த்தது …என்று சொல்லிக்கொண்டே .. வரவேற்பறைக்கு வந்து மெதுவாக சோபாவில் அமருகிறான்
பின்னாடியே வந்தவள் …மனதைப்போட்டு குழப்பாதீங்க .. காபி தறேன் குடிச்சிட்டு … குளிங்க .. சீக்கிரம் ஆபீஸ் போகணுமின்னு சொன்னேங்க .. என்றுசொன்னவாரே கீஸர் ஸ்விட்சை அமுத்தினாள் ….
காபியை குடிக்கமுடியாமல் கையிலேயே வைத்துக்கொண்டிருந்தான் …
மனம் ஏதேதோ சொல்கிறது மனசாட்சி அவனை கொல்கிறது …
நான் நேத்து ராத்திரி அந்த பெண்ணனிடம் பேசி கவுன்சிலிங் பண்ணியிருக்கலாமோ ….
அப்பறம் எதுக்கு இந்த கவுன்சிலிங் படிப்பு … கண்ணுமுன்னாலே …. ஒரு உயிர் ….. எவ்ளவு பெரிய தப்பு ….
ஒருவேளை இந்த பொண்ணோட அம்மாதான் நேற்று என்னை பார்க்கணுமின்னு போன்பண்ணியிருப்பாங்களோ ……
மீண்டும் அவன் பதறுகிறான் …….இதயம் படபடவென்று துடிக்கின்றது …..தன்னைத்தான் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறான் …..
கண்களைமூடி தியானிக்கிறான் ………இப்போது அமைதியான தன் இதயத்தை மெதுவாக வருடுகிறான் …
கைகளிலி ல் ஏதோ தட்டுப்படுகிறது …… பள்ளிப்பருவத்தில் அம்மை நோயால் வந்த தழும்பு …
இன்றைக்கு ஏனோ புதிதாகத்தெரிந்தது அவனக்கு …….
மனதில் ஏதோ உறுதியெடுத்தவனாக குளிக்கச்செல்கிறான்
கையில் ஒரு டைரியுடன் மனவியைப்பார்த்து … பிரியா இனிமேல் எந்த கவுன்சிலிங் கால் வந்தாலும் முழுவிவரத்துடன் இதில் பதிவு செய், தயவுசெய்து ஒன்னுகூட மிஸ் ஆகக்கூடாது என்றவனை பெருமிதத்துடன்பார்க்கிறாள் …..

4 Comments on “தழும்பு/அதிரன் (சு . இசக்கியப்பன்)”

Comments are closed.