
பாற்சுவை அறிந்தவை பழனத் தாமரை
மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம்
கோற்றொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மபலைத்தேன் அரியப் பாய்ந்தவே
அறிந்தவை – இங்கே அவை என்ற சொல் கயல் மீன்களைக் குறிக்கிறது. பழனத் தாமரை- பழனம் என்றால் வயல். விளைநிலம். இதனை பகுப்பதம் என்பர். பகுப்பதம்…பகாப்பதம் பள்ளியில் படித்திருப்போம். பழம் + அன் + அம் = பழனம்
வயல் பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநானூறு 13) அதாவது மருத நிலம் என்று பொருள் கிடைக்கிறது. பொய்கை என்றும் ஒரு பொருள் வருகிறது.
கோற்றோடி – திறண்ட வளைகள் . இதற்கு இன்னொரு பொருளும் காணலாம்.
தொடி – கோற்றொடி எனில் திறண்ட வேலைத்திறம் அமைந்த கைவளையல் அணிந்த மாதர்கள் என்று பொருள்
கோற்றொடி மாதரொடு (சிலப்பதிகாரம் 26.121)
நுளைச்சியர் – நெய்தல் நிலத்து மகளிர். பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் – மீன் பிடிக்க வளை தொடுப்பர். வெரீஇய – வெருண்ட – இடைக்குறை இலாத என்று பொருள் காண்
இப்போது பாடலின் முழுப் பொருளையும் காண்போம்.
பால்சுவை தோயப் புரண்டு விழும் கயல்மீன்கள் வயலிலே உள்ள தாமரையின் மேல் படப் பாய்கின்றன.
தாமரையை மொய்த்துக் கிடந்த வண்டினங்கள் பயந்து பறக்கின்றன.
முத்துச்சரம் கோர்க்கும் மணி வளையல்கள் அணிந்த நுளைச்சியர்கள் அணிந்திருக்கும் முத்து மாலைகளின் மேல் பாய்ந்து அதில் பொதிந்திருக்கும் தேன் சிதற அந்த வண்டினங்கள் பறந்து திரிந்தன என்பதே இப்பாடலின் பொருளாக அமைகிறது.
47
