இயலாமை/ வளவ. துரையன்

செய்தித்தாளைத் தண்ணீரில்
வீசி எறிந்த
பேப்பர் பையனை

ஏழு மணிக்கே
குழாய் நிறுத்திய
மோட்டர் போடுபவனை

பேருந்தில் கனமாய்க்
காலை மிதித்த
கல்லூரி மாணவனை

எதிரே வந்து நின்று
சிரித்துப் பேசியென்
வேலை கெடுக்கும்
எழிலான ஸ்டெனோவை

கண்டிக்க இயலாக்
கவிஞனிவனும்
வாழ்ந்து கொண்டிருக்கிறான்