அன்றாடம் வந்து/செ.புனிதஜோதி

குற்றமும் குறையும்
காணாத மரம்
தினமும் தருகிறது
அன்பான மலரை

உதிர்ந்தாலும்
மணத்தைத் தராத
மலரில்லை

காற்றின் இசைவுக்கு
ஆடும் மரங்கள்
அடிமையாய் நினைப்பதில்லை

அன்றாடம் வந்து
செல்லும்,நிலவும்
கதிரும் அலுத்துக்கொள்வதில்லை

இயற்கையிடம்
இல்லாதவொன்று
நம் தலையில்
யார் எழுதியது

One Comment on “அன்றாடம் வந்து/செ.புனிதஜோதி”

Comments are closed.